சிறுதானிய பயிர்களுக்கு மானியம்
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு சிறுதானிய இயக்ககம் சார்பில் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகளுக்கு உழவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், பறவைகளை விரட்டுதல் ஆகிய செலவுகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ. 4000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. கள ஆய்வாளர்கள் அல்லது திருநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள வேளாண் அலுவலகத்தில் விபரம் அறியலாம் என உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.