உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திறக்காத சுகாதார வளாகத்தால் அவதி

திறக்காத சுகாதார வளாகத்தால் அவதி

பேரையூர்: பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டியில் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறப்பு விழா காணாத வளாகத்தால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் ஒன்றிய நிர்வாகத்தால் கழிப்பறை கட்டப்பட்டது. ஓராண்டாகியும் தற்போது வரை திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் உருவாகி, வீணாகும் சுகாதார வளாகத்தை ஒன்றிய அதிகாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் திறந்தவெளி பயன்பாடு இல்லாமல் போகும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ