சாக்கடையால் அவதி
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஊராட்சி அய்யப்ப நாயக்கன்பட்டியில் சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அப்பகுதி சுரேஷ்குமார்: பல மாதங்களாக சாக்கடை பராமரிப்பின்றி உள்ளது. குப்பை சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அரசு பள்ளி அருகே அடைப்பு ஏற்பட்டு கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை என்றார்.