மேலும் செய்திகள்
சாலையில் கிடந்த ரூ.17 லட்சம் ஹவாலாவா என விசாரணை
59 minutes ago
தேனுாரில் கும்பாபிஷேகம்
20 hour(s) ago
திருநகரில் ரோடு சீரமைப்பு
20 hour(s) ago
கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
21 hour(s) ago
மதுரை : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைதிறக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்பு தட்டையுடன் ஆர்ப்பாட்டம்செய்தனர்.மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர்கதிரேசன் தலைமை வகித்தனர். பொருளாளர் மொக்கமாயன், துணைத் தலைவர்கள் ராமராஜ், மாதவன்,போஸ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் குமார், ராஜாமணி, நாராயணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநில தலைவர் வேல்மாறன் பேசியதாவது: அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரைஆலை இயக்கப்படும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிக்கப்படும் என்ற தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். சட்டசபை கூட்டத்தில் ஆலையை இயக்க ரூ. 27 கோடி அறிவிக்கப்பட்ட பிறகும் பணி நடக்கவில்லை. உடனே ஆலையைத் திறக்க வேண்டும் என்றார்.நிர்வாகிகள் வேல்பாண்டி,இளங்கோவன், உமாமகேஸ்வரன், அடக்கி வீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
59 minutes ago
20 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago