தண் ணீ காட்டும் ஊராட்சி தவிக்கும் சுந்தரராஜபுரம்
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டி ஊராட்சி சுந்தரராஜபுரத்தில் மேல்நிலைத் தொட்டி மற்றும் போர்வெல் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன் மோட்டார் பழுதானது. அதை சரிசெய்வதற்காக ஊராட்சி நிர்வாகம் எடுத்துச்சென்றது. 'சும்மாதானே இருக்குது' என குடிநீர் பிளாஸ்டிக் தொட்டியையும் எடுத்துச்சென்றுவிட்டனர். அப்பகுதி ஜெயக்குமார்: இதுதொடர்பாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். நேரில் ஆய்வு செய்தவர்கள் சரிசெய்வதாக கூறிச்சென்றனர். இதுவரை சரி செய்யாததால் போர்வெல் மற்றும் தொட்டி இருந்த இடம் புதர் மண்டிவிட்டது. நீண்ட தொலைவில் உள்ள செல்லியம்மன் கோயிலின் போர்வெல், பாசன வயல் மோட்டார் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகிறோம். மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.