உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழர் துணை ஜனாதிபதியாக வர ஆதரவு: செல்லுார் ராஜூ விருப்பம்

தமிழர் துணை ஜனாதிபதியாக வர ஆதரவு: செல்லுார் ராஜூ விருப்பம்

வாடிப்பட்டி; 'தமிழரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து ஒட்டு மொத்த தமிழக எம்.பி.,க்களும் ஆதரவு தரவேண்டும்' என செல்லுார் ராஜூ கூறினார். பரவை சத்தியமூர்த்தி நகரில் உச்சி மாகாளியம்மன் கோயில் வளாகத்தில் ரூ.12 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பூமி பூஜை,சந்தன மாரியம்மன் கோயில் முன்பு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட பக்தர்களுக்கான தகர கூரை திறந்து விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ துவக்கி வைத்தார். நகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கலா மீனா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஆதவன் வரவேற்றார். கவுன்சிலர்கள் சவுந்தரபாண்டி, ரமேஷ்குமார், கீதா, வின்சி, நிர்வாகிகள் ராஜா, பாண்டியன், அவை தலைவர் நாகமலை, ஐ.டி., அணி ராஜூ பங்கேற்றனர். செல்லுார் ராஜூ பேசியதாவது: நான் மேற்கு தொகுதி பரவை பேரூராட்சி பகுதியில் மக்களின் தேவை மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். சிலர் திருவிழாவிற்கு வந்து செல்வதுபோல தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வாக்குறுதி தருவார்கள். நான் அப்படி அல்ல. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். தமிழரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர். அனைத்து கட்சியினரிடமும் அன்பாக பழகக் கூடியவர். இவரை வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் நட்டாவிற்கு நன்றி. நாம் திராவிடம் என்று பார்க்காமல் தமிழராக பார்த்து தமிழ்நாட்டின் அனைத்து எம்.பி.,க்களும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற ஆதரவு தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை