மறுகால் பாயும் சூரக்குளம் கண்மாய்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் சூரக்குளம் கண்மாய் மழை நீரால் நிரம்பி மறுகால் பாய்கிறது. இக்கண்மாய் தண்ணீர் மூலம் 300க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய் நிரம்பி நேற்று மறுகால் பாய்ந்தது. இக்கண்மாயிலிருந்து மறுகால்பாயும் தண்ணீர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்கிறது. ஐந்தாவது ஆண்டாக இக்கண்மாய் மறுகால் பாய்கிறது. அப்பகுதி விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.