உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீடுகளுக்கான இடம் தேர்வு பகுதியில் அளவிடும் பணி

வீடுகளுக்கான இடம் தேர்வு பகுதியில் அளவிடும் பணி

உசிலம்பட்டி : பாப்பாபட்டி ஊராட்சி கரையாம்பட்டியில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு காலனி வீடுகளுக்கான இடம் தேர்வு செய்த பகுதியில் அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்கும் பணி உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் தனசேகரன், தலைமை சர்வேயர் ஜெயபாண்டி, சர்வேயர் நாகூர்மீரான், வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இப்பகுதியில் ஏற்கனவே 57 பேருக்கு இடம் கொடுத்திருந்த நிலையில் மேலும் 46 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ