உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தை அமாவாசை சிறப்பு பூஜை

தை அமாவாசை சிறப்பு பூஜை

ஊமச்சிகுளம்: மதுரை காஞ்சரம்பேட்டை பாறைப்பட்டியில் தை மாத சர்வ அமாவாசை பூஜை சித்தி விநாயகர், மந்தை கருப்பசாமி, பேசும் கன்னிமார் கோயிலில் நடந்தது. இதில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. பேசும் கன்னிமார் 7 அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், பல வண்ண பூமாலைகள், பட்டாடைகள், அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகளும் நடந்தது.மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் மண்டப வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாறைபட்டி கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை