மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
20-Jun-2025
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது.ஆய்வுவள மையர் ஜான்சிராணி வரவேற்றார். சங்க இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார். உதவிபேராசிரியர் திலகராஜ் முன்னிலை வகித்தார்.உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லுாரி உதவிபேராசிரியை சபானா பர்வீன் பேசுகையில், ''இலக்கியங்களின் பெட்டகமாக இணையம் உள்ளது. இணையத்தில் தமிழ் வளர்கிறது என்பதை உரக்கச் சொல்லலாம். வலைப்பூ புலம்பெயர் தமிழர்கள் உரையாட பயன்படுத்தப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் வலைப்பூவை உருவாக்கலாம்'' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.
20-Jun-2025