உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க்கூடல் நிகழ்வு

தமிழ்க்கூடல் நிகழ்வு

மதுரை: மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வுவள மையர் ஜான்சிராணி வரவேற்றார். வக்பு வாரிய கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் தவுலத்பேகம் முன்னிலை வகித்தார். போடி ஏல விவசாயிகள் சங்க கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் அலுமேலு பேசுகையில், ''இயற்கையாக இருந்தால் நாடு வளம் பெறும். நற்றிணை பாடல் ஒன்றில் புன்னை மரத்தை சகோதரியாக பார்க்கும் பண்பினை கூறுகிறது. அந்தளவிற்கு சங்க காலத்தில் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர்'' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி, உதவி கணக்கு அலுவலர் பாண்டிச்செல்வி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி