உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளை ஏமாற்றி நிறுவனங்களை பாதுகாக்கும் தமிழக அரசு: சங்கம் சாடல் விவசாயிகள் சங்கம் சாடல்

விவசாயிகளை ஏமாற்றி நிறுவனங்களை பாதுகாக்கும் தமிழக அரசு: சங்கம் சாடல் விவசாயிகள் சங்கம் சாடல்

மதுரை: 'காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மகசூல் இழப்புக்கான காப்பீட்டுத் தொகையை வழங்காமல், நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளுக்கான தொகையை பட்டுவாடா செய்யாத தனியார் நிறுவனத்தை தமிழக அரசு பாதுகாத்து விவசாயிகளைஏமாற்றுகிறது,' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டமைப்பு மாநிலத் தலைவர்பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், நான்காண்டு காலமாக பயிர் காப்பீட்டு திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. தி.மு.க.,வின் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.பயறு, உளுந்து போன்றவற்றை மத்திய அரசு மூலம் மாநில அரசு கொள்முதல் செய்யும் திட்டம் உள்ளது. ஆனால் குறைந்தபட்ச இலக்கீடு நிர்ணயித்து விளைபொருள் முழுவதையும்கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுக்கிறது.விவசாயிகளுக்கு ஆத்மா திட்ட நிதி ஒதுக்கீடுஉரியமுறையில் சென்றடையவில்லை. சாகுபடி பரப்பளவில் 20 சதவீத நிலப்பரப்புக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு திட்டம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 35 லட்சம் எக்டேரில் நெல் உற்பத்தியாகிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல்மையம் செயல்பட்டு வந்தது. தற்போது தேசிய நுகர்வோர் கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதலில் ஈடுபடாமல் தனியார் நிறுவனம் தான் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் குறித்த விவரங்கள் கூட நுகர்பொருள் வாணிப கழக பட்டியலில் இல்லை.வட மாவட்டங்களில் இம்முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்து கொண்டு ரூ.600 கோடி வரை தராமல் நிறுவனம் ஏமாற்றி வருகிறது. விவசாயிகளை பாதுகாக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது. நிதி ஒதுக்கீடின்றி அறிவிக்கப்படும் திட்டங்கள் விளம்பர திட்டங்களாகவே உள்ளன.முதல்வர் ஸ்டாலின், தன்னைத்தானே பாராட்டிக்கொள்வதையும் விவசாயத்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பொய் பிரசாரம் செய்வதையும் விவசாயிகள் ஏற்கவில்லை. இதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
மே 29, 2025 09:15

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கற்பகனகர் பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: * உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. * வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. * சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். * பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1.சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4.சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.


புதிய வீடியோ