ஆசிரியர்கள் எஸ்கலேட்டர் போன்றவர்கள் குன்றக்குடி அடிகளார் பேச்சு
திருப்பாலை : திருப்பாலை மதுரை பப்ளிக் பள்ளி ஆண்டு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடந்தது. தாளாளர் நாச்சியப்பன், இயக்குனர்கள் ஆதிமூலராஜன், முத்தையா, ஈஸ்வரி முன்னிலை வகித்தனர்.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், ''ஆசிரியர், பெற்றோரை மதிப்பதுடன், சமுதாயத்தை மாணவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் 'எஸ்கலேட்டர்' போன்றவர்கள். மாணவர்களையும் சமுதாயத்தையும் மேம்படுத்துவதுடன் தாங்களும் வளர்ச்சியடைய வேண்டும். விவேகானந்தர் சிகாகோ சென்று நாடு திரும்பிய பின் அந்நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு 'தாழ்ந்துள்ள நம் மக்களை உயர்த்த ஒரே வழி கல்வியே' என பேசினார். வள்ளுவர் கூற்றுப்படி கற்ற பின் அவ்வழி நடந்தால் தான் சமுதாயம் மேம்படும்'' என்றார்.தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரகாஷ், முதல்வர்கள் கவுரி, ஜெயந்தி, ஆசிரியர்கள், பெற்றோர், மதுரை மீனாட்சி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.