உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடந்தது.குழு ஒருங்கிணைப்பாளர்கள் தனபால் ஜெயராஜ், ஜெகதீசன் தலைமை வகித்தனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளில் சேர்வதற்கான 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும்.உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ள ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களையும் எண்ணிக்கையில் கணக்கிட வேண்டும். நிதியுதவிபெறும் பள்ளிகளின் தொடர் அங்கீகாரம் புதுப்பித்ததை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை