ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜசேகர் வரவேற்றார்.மாநில பொருளாளர் கார்த்திகேயன், முன்னாள் மாநில தலைவர் சுரேஷ் சிறப்புரையாற்றினர். பதவி உயர்வு அளித்த பின் காலியாக உள்ள அனைத்து பி.ஜி., ஆசிரியர் பணியிடங்களையும் வெளிப்படையாக காண்பித்து முன்னுரிமை பெற்றவர்களுக்கு உரிய வாய்ப்பு அளித்து மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆய்வு என்ற பெயரில் கலெக்டரும் பிற துறை அலுவலர்களும் ஆசிரியர்களை கண்ணியக் குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.