உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

கோயில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கென துவக்கப்பட்ட புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று பூஜையுடன் நடந்தது.சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அரசால் அறிவிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டனர். இது தற்காலிகமாக கோயிலுக்கு முன்புள்ள புறக்காவல் நிலையத்தில் இயங்கியது.தற்போது பெரியரத வீதி தனியார் மண்டபத்தில் கோயில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு நேற்று காலை சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். மதுரை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் திறந்து வைத்தார். திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் சசிப்பிரியா, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள், மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, இன்ஸ்பெக்டர்கள், ராஜதுரை, மதுரைவீரன், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !