உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தற்காலிக பணியாளர்கள் தர்ணா 

தற்காலிக பணியாளர்கள் தர்ணா 

மதுரை; மதுரை அரசு மருத்துவமனையில் கிரிஸ்டல் தனியார் நிறுவனம் மூலம் தற்காலிகமாக 706 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்றுடன் சுமீட் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கைமாறிய நிலையில் கூடுதலாக 300 பணியாளர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மூன்று ஆண்டு ஒப்பந்தம் மற்றும் ஓராண்டு தேவைப்பட்டால் நீட்டிப்பு என்ற நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 56 வயதை கடந்தவர்களுக்கு ஒப்பந்தம் முடியும் தருவாயில் பி.எப். பிடித்தம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் அத்தகைய ஊழியர்களை தனியாக கணக்கெடுத்தனர். இதை எதிர்த்து56 வயதை கடந்த 60 பேர், சக ஒப்பந்த தொழிலாளர்களுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அந்நிறுவன அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து நிறுவன உயர் அதிகாரிகளிடம் பேசி சரி செய்யப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை