உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை

மதுரை : தமிழகத்தில் நாளை (ஜன.6) புதுக்கோட்டையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடப்பதையொட்டி மதுரை மாவட்டத்தில் இருந்து பங்கேற்க செல்லும் காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.மண்டல இணை இயக்குநர் நடராஜ குமார் கூறியதாவது: தல்லாகுளம் பாலிகிளினிக், சமயநல்லுார், மேலுார், திருமங்கலம், சேடபட்டி கால்நடை மருத்துவமனைகள், 101 கால்நடை மருந்தகங்களில் அந்தந்த பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லலாம். மாடுகளின் நிறம், கொம்பு, உடல் காயம், காய்ச்சல் இருக்கிறதா, நாட்டு மாடு தானா என்பதை பரிசோதனை செய்து டாக்டர்கள் சான்றிதழ் வழங்குவர். கலப்பின மாடுகளுக்கு அனுமதியில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ