உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு சோதனை

ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு சோதனை

eதுரை: மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுரு கூறியதாவது: நைஜீரியா, காங்கோ உட்பட ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடந்த 21 நாட்களுக்குள் சென்று வந்தவர்களுக்கு 'மங்கி பாக்ஸ்' காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், தோலில் தடிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தப்படுவர். ஆக. 17 முதல் தற்போது வரை மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் இதுவரை யாருக்கும்' மங்கி பாக்ஸ்' அறிகுறி கண்டறியவில்லை என்றார். ஒருவேளை மதுரையில் 'மங்கி பாக்ஸ்' அறிகுறியுடன் யாரேனும் கண்டறியப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமை வாடில் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதற்கென இங்கு சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை