வாசகர்கள் கருத்துகள் ( 20 )
உற்பத்தியாளருக்கு சாதகமான சட்டம் இது.. நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் கொடுத்ததை வாங்கி வைத்துக்கொண்டு பிறகு நம்பிக்கை துரோகம் செய்பரே அதிகம்.. ஒன்று புரியவில்லை.. வாங்கியபோது இருந்த "விற்கும்" என்கிற நம்பிக்கை இப்போது எங்கே போனது? எதற்கு திருப்பிஅனுப்புகிறார்கள்? விற்றவன் என்ன மடயனா? அவர்கள் திரும்ப கொள்ளக்கூடாது.. இது துரோகம்.. "வித்திருந்தா லாபம்ப்பாத்துட்டு காசு கொடுத்திருவோம்.. இல்லேன்னா உற்பத்தி செஞ்சவன் பாடு" என்பது போல முதலே இல்லாமல் வியாபாரம் செய்யவே இந்த நம்பிக்கை முறை உதவும்..
இந்த உத்தரவு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இயற்றப்பட்டது. பெரிய நிறுவங்கள், சிறிய நிறுவனக்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் அதற்குரிய தொகையை கொடுக்காமல் காலதாமதம் ஆவதால் அந்த நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் நலிவடைகின்றன அல்லது அதிக வட்டிக்கு மேலும் கடன் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இந்த சட்டத்தை முறையாக செயல்படுத்தினால் சிறு குறு நிறுவனங்கள் பயனடையும். அரசுக்கு செலுத்தவேண்டிய வரிக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. விற்பனைக்கான பில் போடப்பட்ட தேதியிலிருந்து வரி செலுத்த வேண்டிய கெடு.
அது வாங்குறவன் பாடு... திரும்ப கொடுக்குறவன் பாடு. அந்த வியாபாரத்துக்குள்ளார அரசாங்கம் ஏன்யா மூக்கை நுழைக்குது... சரி, கொள்முதல் செய்பவன், வியாபாரம் டல்...லா இருந்தால், அண்ணாச்சி கொரோனா வந்ததாலே, வியாபாரம் படுத்திருச்சி... முப்பது வருஷமா வியாபாரம் உங்களிடம் பண்ணிட்டிருக்கேன். ஏதோ, கிரகம் இப்படி தேங்கி கிடக்கு... நிச்சயம் திருப்பி தந்திடுறேன்...ன்னு சொல்லுவான், ரெகுலர் கஸ்டமர் என்பதால் அவனும் விட்டு பிடிப்பான், சிறுக சிறகக்கூட வாங்கிப்பான். அது வாங்குபவன், விற்பவனுக்குள்ளார உள்ள உறவு.
எண்ணாமீறி நாயம் பேசுறே கனேஜு... அப்போ எதுலயும் அரசாங்கம் நாளைய முடியாது.. கோவில்களை எதற்கு அரசு வைத்திருக்கவேண்டும் திராவிடரே? அதா வெச்சிகிறவன் மேச்சுக்கறான்.. ஒன்னுக்கு இன்னாபா வந்தது?
மிக மிக சரியான உத்தரவு சரிதான். நீங்கள் போய் மார்க்கெட்டில் ஒரு பொருள் வாங்கினால் பணம் என்ன உடனே கொடுப்பீர்களா இல்லை அடுத்த மாதம் கொடுக்கின்றேன் என்று ஒரு நம்பிக்கை கொடுத்து வாங்கி வந்து விட்டு 3 மாதம் ஆனாலும் கொடுக்காமல் இருந்தால் விற்பனை
வரியை பொருள் அனுப்பியவுடன் செலுத்தி மாதந்திர விற்பனை வரி அறிக்கையில் குறிப்பிடலாம் (as approval on sale). பொருள் திருப்பப்பட்டால் அதன் வரியை கழித்துக் கொள்ளலாம்.
தேவை இல்லாமல் அரசு உள்ளே வருகிறது என்று நினைக்கிறன்
எது தேவையில்லாதது? காசை வாங்கிக்கொண்டு காசு இன்னும் வரவில்லை என்று பொய் சொல்லி வரி ஏய்ப்பு செய்வது மட்டும் தேவையானதா? உண்மையில் நஷ்டம் என்றால் வராக்கடன் குடுத்த நிறுவனத்துக்கு வங்கி எதன் அடிப்படையில் உத்தரவாதம் கொடுக்க முடியும்? கொடுத்த பொருள் திரும்ப வாங்கப்பட மாட்டது சொன்னால், வாங்குபவன் காசில்லாமல், தேவையில்லாமல் வாங்கி திரும்ப கொடுக்க மாட்டான்.
வாராக்கடன் பிரச்சினைகள் வங்கிகளுக்கு மட்டுமல்ல அதன் வாடிக்கையாளர்களுக்கும் உண்டு. வணிகர்கள் அதிக நிலுவை வைக்கும் போது அது உற்பத்தியாளர்கள் அதிக வட்டி கட்டுவதில் முடியும். அதிக வட்டி செலவு அடுத்த சப்ளையில் விலையுயர்வில் முடியும். வணிகர்களுக்கு அதிக நாட்கள் தவணை தருவதால் விற்பனை எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகமாவதில்லை. வணிகர்களிடையே நேர்மை தேவை.
Unnecessary interference in the business.
பொருளை வாங்கிக்கொண்டு பணத்தை தராமல் இழுத்தடிப்பவர்கள் அதிகம். அதனால் தான் இந்த நடவடிக்கையே. உற்பத்தி செய்பவர்கள் முதலீடு போட்டு அதில் பல தொழிலாளர்கள் வேலை செய்த பின்பு தான் ஒரு பொருளை உருவாக்க முடிகிறது. வியாபாரிகள் பத்து ரூபாய் பொருளை குறைந்த பட்ஷம் நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். வாங்கியதில் முப்பது சதவீத பொருட்களை விற்றாலே நூறு சதவீதத்திற்கான பணம் கிடைத்துவிடும். ஆனால் உற்பத்தியாளர்களுக்கு அப்படி கிடையாது. உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் ஒன்றுதான்.
உற்பத்தியாளர்கள் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி வங்கிக்கு செலுத்தாமல் இருப்பதற்க்கு சொல்லப்படும் முக்கிய காரணம் வரவில் நிலுவைத்தொகை அதிகமாக உள்ளது என்பது. 45 நாட்களுக்குள் என்பதை 60 நாட்களுக்குள் என திருத்தி அமைக்கலாம். வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்த விட்டால் உற்பத்தியாளர்கள் வங்கிக்கு அபராத தொகை கட்டவேண்டியிருக்கும். எனவே ஒருத்தருக்கு சாதகம் என்றால் மற்றவருக்கு பாதகம். வங்கிகளில் வாரா கடன் தொகையை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகள் தான் இது.
அதே நேரம் உற்பத்தியாளர்கள் சொன்ன நேரத்துக்கு உற்பத்தி செய்து கொடுக்கவில்லை என்றாலும் அபராதம் விதிக்கலாமே
மொத்ததுல ரெண்டு குரூப்பும் ஏமாத்த முடியல. அதான் இவ்வளவு காண்டு.
மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
34 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
35 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
37 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
38 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
38 minutes ago