தக்கர் பாபா பிறந்த தினம்
மதுரை: கட்டட பொறியாளர் பணியை துறந்து துப்புரவு தொழிலாளர்களுக்காக பாடுபட்டவர் அமிர்தலால் விட்டல்தாஸ் தக்கர் பாபா. அவரது பிறந்தநாள் மதுரை சேவாலயம் மாணவர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. ஹரிஜன சேவா சங்க செயலாளர் ஸ்ரீனிவாசன், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், பொறியாளர் ராமகிருஷ்ணன் பேசினர். மதுரையை குப்பையில்லா நகரமாக மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் என்றனர்.