மேலும் செய்திகள்
அஷ்டபுஜர் கோவில் அருகே சேதமான பாலத்தால் அபாயம்
06-Feb-2025
திருநகர்; மதுரை திருநகர் -பாலசுப்பிரமணியன் நகர் இணைப்பு தரைப்பாலத்தில் லாரி சிக்கி கொண்டதால் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய் மேல் இப்பாலம் உள்ளது. திருநகரின் ஒரு பகுதியிலிருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜிநகர், ஹார்விபட்டிக்கு செல்வோரும், பள்ளி வாகனங்கள், மணல் லாரிகளும் அதிகம் பயன்படுத்துகின்றனர். பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய ஓட்டை விழுவதும், பூசுவதும் சில ஆண்டுகளாக தொடர்கிறது. இப்பாலம் சேதம் அடைந்தால் 2 கி.மீ., சுற்றித்தான் வர வேண்டும். இதுகுறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு வருகிறது.நேற்று முன்தினம் மாலை பாலத்தில் வந்த மணல் லாரி பள்ளத்தில் சிக்கியது. கைப்பிடிச்சுவரும் உடைந்ததால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Feb-2025