மேலும் செய்திகள்
ஆபத்தான நிலையில் அரசு பள்ளி
03-Aug-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் தெற்கு ரத வீதியில் சாக்கடை கால்வாய் பாலம் உயர்ந்து, ரோடு தாழ்ந்துள்ளதால் தண்ணீர் தேங்கி அப்பகுதியினர் சிரமமடைகின்றனர். அப்பகுதி முருகன் கூறியதாவது: இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் பாலம் கட்டப்பட்டது. ரோடு மட்டத்தில் இருந்து உயர்த்தி கட்டப்பட்டது. கட்டி முடித்து ரோட்டை பாலத்தின் மட்டத்திற்கு உயர்த்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அப்பகுதி மேடு பள்ளமாகவும் சேதம் அடைந்த நிலையிலும் உள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும், சுகாதார சீர்கேடும் உள்ளது. தேங்கிய நீர் வடிய வழியில்லை. இதனால் வெயில் அடித்து நீர் ஆவியாகும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
03-Aug-2025