மதுரையில் கோலாகலமாக துவங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
மதுரை : பிளஸ் 2க்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று (மார்ச் 26) துவங்கியது. மார்ச் 28 வரை 3 நாட்கள் மதுரை தமுக்கம் அரங்கில் கோலாகலமாக நடக்கிறது.தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன சி.இ.ஓ., சுந்தரராமன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர் ஜெய்சங்கர், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் சிதானந்தமிர்தா சைதன்யா.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e4fgdm2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் அனுபவமிக்க கல்வி நிபுணர்கள் பயனுள்ள ஏராளமான உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் தினமலர் வழிகாட்டி மூலம் பயன்பெற்றுள்ளனர். சிறப்பு கருத்தரங்குகள்
இந்தாண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு மதுரை தமுக்கம் அரங்கில் நடக்கிறது. கல்வி கண்காட்சியுடன் கருத்தரங்குகளும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. மூன்று நாட்களிலும் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில் 21ம் நுாற்றாண்டு திறன்கள் தலைப்பில் நாஸ்காம் தேசிய தலைவர் உதயசங்கர், நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் - டி.ஆர்.டி.ஏ., ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் - கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ், கல்விக் கடன் எளிது - வங்கியாளர் விருத்தாசலம், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள் - கல்வியாளர் நெடுஞ்செழியன், உடனடி வேலை வழங்கும் படிப்புகள் - கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, நீட், ஜெ.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ் - கல்வி ஆலோசகர் அஸ்வின், ஏ.ஐ., எக்ஸ்பர்ட் - டெக் மகேந்திரா துணைத் தலைவர் தினேஷ் வேணுகோபால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனை வழங்கவுள்ளனர். விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஓரிடத்தில்...
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் என 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR Code ஸ்கேன் செய்து அல்லது 95667 77833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிக்கு RGN என்று டைப் செய்து அனுப்பவும். அனுமதி இலவசம்.இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.
பள்ளிகளின் அரங்குகள்
வழிகாட்டி நிகழ்ச்சியில் முதன்முதலாக கூடுதலாக பள்ளிகளின் அரங்குகளும் இடம்பெறுகின்றன. பள்ளிகளில் உள்ள வசதிகள், வித்தியாசமான படிப்புகள் தரும் பள்ளி எது, அதிக மதிப்பெண் வாங்க வைக்கும் பள்ளி எது, 'நீட்' வெற்றியை எளிதாக்கும் பள்ளி எது என்பது பற்றியெல்லாம் நேரடியாக அறியலாம். எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலான அட்மிஷன் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.