உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத்துறையினர்

கண்மாயில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத்துறையினர்

அவனியாபுரம்: மதுரை காமராஜபுரம் வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன் மணி 31, கேட்டரிங் வேலை பார்க்கிறார். நேற்று பெருங்குடி அருகே திருமண விழாவில் வேலை முடித்து அவனியாபுரம் பர்மா காலனி பகுதி கண்மாய்க்கு சென்றார். அங்கு மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் பரிசலில் ஏறி அமர்ந்துள்ளார். காற்று பலமாக அடித்ததால் பரிசல் குளத்தின் மையப் பகுதிக்கு சென்றது. நீச்சல் தெரியாததால் அங்கிருந்த கம்பை பிடித்து சத்தமிட்டுள்ளார். தீயணைப்பு துறை வீரர்கள் அவரை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ