உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீப்பிடித்த லாரி

தீப்பிடித்த லாரி

-----கள்ளிக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைகுளம் லாரி டிரைவர் ஹரி பிரதீப் 27. இவர் அம்மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தென்னை கிடுகுகளை ஏற்றிச் சென்றார். நேற்று மதியம் கள்ளிக்குடி சிவரக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் லாரி உரசியது. இதனால் கிடுகுகள் தீப்பிடித்து லாரியில் பரவியது. கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ