கிணற்றில் விழுந்த சிறுமி பலி
அலங்காநல்லூர்: அழகாபுரியில் செங்கல் காளவாசல் நடத்துபவர் பிரசாத் 30. இவருக்கு மனைவி சிவரஞ்சனி மற்றும் 5, 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை குழந்தை சுபாஷினி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிய போது எதிர்பாராமல் கிணற்றில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இருந்து மீட்ட போது குழந்தை இறந்திருந்தது. போலீசார் குழந்தை உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.