உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அச்சுறுத்தும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

அச்சுறுத்தும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

வாடிப்பட்டி; வாடிப்பட்டியில் வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) அலுவலகம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.இங்குள்ள பெருமாள் கோயில் தெப்பத்தின் ஒரு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆர்.ஐ., அலுவலகம் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி பழுதடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.ஐ., அமர்ந்து பணியாற்றும் அறையின் கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. துருப்பிடித்த கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.உதிர்ந்து விழுந்த பகுதியில் கண்துடைப்பாக ஏதோ சிமென்டால் பூசப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் விழும் நிலையில்தான் உள்ளது. எனவே இங்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் இடியும் கட்டடங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கும் ஆர்.ஐ., அலுவலகமே அபாய நிலையில் உள்ளது. புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி