உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எகிறியது முருங்கைகிலோ ரூ.120 தான்

எகிறியது முருங்கைகிலோ ரூ.120 தான்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மொத்த மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ. 120க்கு முருங்கைக்காய் விற்றது. கடந்த வாரம் முகூர்த்தம் என்பதால் காய்கறிகளின் விலை கூடுதலாக இருந்தது. தற்போது மழை காரணமாக பீட்ரூட், கேரட், உருளை, கருணை, சேனை, சேம்பு ஆகிய கிழங்கு வகைகள் அழுகத் தொடங்கியுள்ளது. இதனால் இவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. பீன்ஸ் வகைகளின் விலையில் மாற்றமில்லை.

காய்கறிகள் விலை (கிலோ ரூ.,)

கத்தரிக்காய் 30 - ரூ.40 வரை, வெண்டை 40-50, பாகல் 40 - 50, புடலை 30 - 40, உருட்டு மிளகாய் 15 - 20, சம்பா மிளகாய் 20 - 25, சீனி அவரைக்காய் 30, பீர்க்கு, டர்னிப், கோவைக்காய் 40, சுரை 20, முருங்கை பீன்ஸ், பீட்ரூட் 50, பட்டை அவரை 80, நாட்டு வெங்காயம் பழையது 70 - 85, புதியது 50 - 70, பல்லாரி புதியது 40 - 60, பழையது 70 - 80, மாங்காய் கல்லாமை 50 - 60, நாட்டு மாங்காய் 30 - 40, நெல்லிக்காய் 50 - 60, கறிவேப்பிலை 40, மல்லிதழை, முட்டைகோஸ் 30, புதினா 40, இஞ்சி பழையது 170, இஞ்சி புதியது 50, தக்காளி 30 - 40, கேரட் 40 - 80, சோயா பீன்ஸ் 100, பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் 120, ஜெர்மன் பீன்ஸ் 50 - 60, சவ்சவ் 20, கொடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் 50, சேனை, சேம்பு, உருளைக்கிழங்கு 60, கருணைக்கிழங்கு 90 க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ