உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கல் பயணம் ஆட்டோ மோதி உயிர் தப்பிய தருணம் திக்...திக்...

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கல் பயணம் ஆட்டோ மோதி உயிர் தப்பிய தருணம் திக்...திக்...

மதுரை : மதுரை தெப்பக்குளம் - அண்ணாநகர் பாலத்தில் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணித்த பள்ளி மாணவர்களில் ஒருவர் ஆட்டோ மீது மோதிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.காலை, மாலை 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் அதிக பஸ்கள் இயக்கப்பட்டாலும் அதற்கேற்ப பயணிகளின் கூட்டமும் இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து செல்வதற்காக 'பஸ் நிரம்பி வழிந்தாலும் பரவாயில்லை. படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்போம்' என மாணவர்கள் 'ஜாலி'யாக பயணம் செய்து வருகின்றனர். டிரைவர், கண்டக்டர், போலீசார் கண்டித்தாலும் கேட்பதில்லை.உயிர்பலி ஏற்பட்டால் மட்டுமே கண்காணிப்பு, விழிப்புணர்வு, உறுதிமொழி எடுத்தல் என அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும்.போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிக்க அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டக்டர், டிரைவருக்கு அறிவுறுத்தி உள்ளோம். சிலர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளோம்'' என்றார்.போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா கூறுகையில், ''பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கக்கூடாது என தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். படிக்கட்டுகளில் பயணித்தால் டிரைவர், கண்டக்டர் பஸ்சை இயக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை