நீட் நுழைவுத் தேர்வில் 50 சதவீதம் தேர்ச்சி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு
மதுரை : மதுரையில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் சார்பில் இந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். எனினும் இந்தாண்டு இத்தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.மாவட்ட அளவில் அரசு பள்ளி சார்பில் 260, உதவி பெறும் பள்ளிகள் சார்பில் 151 பேர் எழுதினர். இந்தாண்டு தேர்ச்சி 'கட்ஆப்' 113 அடிப்படையில் 204 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு சார்பில் மூன்று மையங்களில் பயிற்சி பெற்ற 180 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு 515 பேர் எழுதியதில் 7.5 சிறப்பு ஒதுக்கீட்டில் 10 பேர் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றனர். இந்தாண்டும் 10 பேருக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் இந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த விவரம் குறித்து தகவல் தெரிவிக்க கல்வித்துறையில் முறையான நடவடிக்கை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.