உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இதே வேலையா போச்சு... மீண்டும் மீண்டும் பள்ளிகளுக்கு மிரட்டல் போலீசிற்கு தொடரும் தலைவலி

மதுரையில் இதே வேலையா போச்சு... மீண்டும் மீண்டும் பள்ளிகளுக்கு மிரட்டல் போலீசிற்கு தொடரும் தலைவலி

மதுரை : மதுரையில் தொடர்ந்து பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருகிறது. நேற்று 3 பள்ளிகளுக்கு மிரட்டல் விடப்பட்டது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் கடந்த செப்.30ல் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 4 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் வழக்கம்போல் புரளி எனத்தெரிந்தது. அடுத்ததாக அக்.2ல் சின்னசொக்கிக்குளம், காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரிங் ரோட்டில் உள்ள ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், நேற்றுமுன்தினம் மதுரை மாவட்டம் பேச்சிகுளம் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.நேற்று 4வது முறையாக கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெற்றோர் பதற்றத்துடன் வந்து மாணவர்களை அழைத்துச்சென்றனர். தொடர்ந்து இமெயில் மிரட்டல் விடுப்பவர் தனி நபரா அல்லது குழுவா என விசாரணை நடந்து வருகிறது. மதுரையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.போலீசார் கூறியதாவது: இதுபோன்ற மிரட்டல் குறித்து விசாரிக்க இந்திய சைபர் கிரைம் கோ ஆர்டினேஷன் (ஐ.சி.சி.சி.,) மத்திய உள்துறை கண்காணிப்பில் செயல்படுகிறது. இதன்மூலம் தேவையான தொழில்நுட்ப வசதிகள், விபரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். இதற்காக மாநில அளவில் ஒரு நோடல் அதிகாரியும் உள்ளார். மதுரை உட்பட தமிழகம் முழுவதும் மிரட்டல் விடுத்து வருவது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சில 'க்ளு' கிடைத்துள்ளது. விரைவில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி