உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடியேறும் போராட்டம்

குடியேறும் போராட்டம்

உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுார் பரமசிவன் பொட்டல் பகுதியில் 1997ம் ஆண்டு ஆதிதிராவிட மக்கள் 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பாதை இல்லாததால் வசிக்கவில்லை. கடந்த 2013ல் இப்பகுதியை மீண்டும் அளவீடு செய்து 202 பேருக்கு பட்டா வழங்கினர். ஏற்கனவே பட்டா வாங்கியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். 'குறிப்பிட்ட காலத்தில் வீடு கட்டி குடியேறாததால் காலி இடமாக கணக்கிட்டு பட்டா வழங்கப்பட்டது. புதிய மனு கொடுத்து பட்டா பெற்றுக்கொள்ளலாம்' என வருவாய் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.இந்நிலையில் பட்டா பெற்ற 202 பேர்களில் 46 பேர் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் அவர்களது பட்டாக்களை ரத்து செய்தனர். இதை கண்டித்து பயனாளிகள், மா.கம்யூ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று பட்டா வழங்கிய இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் மனு கொடுத்தால் தகுதியுள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி