சோழவந்தானில் ஆடிப்பெருக்கு
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா நடந்தது. அம்மனுக்கு 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர் சண்முகம் சிறப்பு பூஜைகள் செய்தார். பெண்கள் பலர் கோயிலில் வழிபாடு செய்து புதிய மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். ஏராளமானோர் கூழ் காய்ச்சி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.