உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டா இணைய சேவை பக்காவாக இருக்கணும்

பட்டா இணைய சேவை பக்காவாக இருக்கணும்

பேரையூர்: தமிழகத்தில் ஆன்லைன் பட்டா இணையதள சேவை அடிக்கடி முடங்கி விடுவதால், பதிவிறக்கம் செய்ய முடியாமல் பொது மக்கள் தவிக்கின்றனர்.இணையதளத்தில் பட்டா, சிட்டா, புலப்பட விவரங்களை பார்வையிட, 'அ' பதிவேடு உள்ளிட்ட விவரங்களும், பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்யும் வசதியும் உள்ளது. இந்த இணையதள சேவை அடிக்கடி முடங்கி விடுகிறது. சில வாரங்களாக இச்சேவை சரிவர கிடைப்பதில்லை. தொடர்ந்து பல நாட்கள் வரைகூட முடங்கி விடுகின்றன. இதனால் விவசாய கடன், வங்கிக் கடன், பத்திரப்பதிவு, நகை கடன்களுக்கு பட்டா பெற முடியாமல் அல்லல்படுகின்றனர். எப்பொழுதும் சீராக சேவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !