மேலும் செய்திகள்
வள்ளலார் கோட்டத்தில் தைப்பூச பெருவிழா
12-Feb-2025
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் தைப்பூசம், அன்னதானம், 13வது சன்மார்க்க சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. சன்மார்க்க சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அகல்விளக்கு நிர்வாகி சாந்தி ஏற்றினார். பூக்களால் அலங்கரித்த வள்ளலார் படத்துடன் நகர்வலம் வந்தனர். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகிகள் குருவாயூரப்பன், ஆதிமூலம் அன்னதானம் வழங்கினர். செயலாளர் நல்லுச்சாமி நன்றி கூறினார்.
12-Feb-2025