மேலும் செய்திகள்
மாமதுரை கவியரங்கம்
04-Apr-2025
மதுரை : மதுரையில் பேராசிரியர்கள் மோகன், நிர்மலா அறக்கட்டளை விருதுகள் விழா, மோகன் 75ம் ஆண்டு நிறைவு விழா, நிர்மலா மற்றும் ரவி எழுதிய நுால்கள் வெளியீடு நடந்தது. உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். ராதகிருஷ்ணனுக்கு காலேஜ் ஹவுஸ் இயக்குனர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த இலக்கிய சீரிதழ் விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணிக்கு வழங்கினார்.நிர்மலா எழுதிய தமிழ் இலக்கியத்தில் பெண்மை, இலக்கிய பூங்கா, கவிஞர் ரவி எழுதிய திசைச்சுவடுகள், திரும்பி பார்க்கிறேன், பொன்குமார் எழுதிய கவிஞர் ரவி ஹைக்கூ கவிதை உலகம் ஆகிய நுால்களை ஓய்வுபெற்ற போலீஸ் துணைகமிஷனர் மணிவண்ணன் வெளியிட்டார். பேராசிரியர்கள் ராமசாமி, அருணகிரி, சங்கீத்ராதா, வானதி பதிப்பகம் வானதி, வழக்கறிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அசோக்ராஜ் நன்றி கூறினார்.
04-Apr-2025