உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  முப்பெரும் விழா

 முப்பெரும் விழா

ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை கிளை நுாலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் யானைமலை அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி தலைமை வகித்தார். நுாலகர் சித்ரா வரவேற்றார். அரசு நுாலக ஆர்வலர் விருது பெற்ற வாசகர் வட்டத் தலைவர் முத்துமணி கவுரவிக்கப்பட்டார். முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி முன்னிலையில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் தென்னவன், சரவணக்குமார், ரபீக்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை