உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டங்ஸ்டன் திட்டம்: கிராம மக்கள் முடிவு

டங்ஸ்டன் திட்டம்: கிராம மக்கள் முடிவு

மேலுார்: மேலுார் அருகே நாயக்கர்பட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அரிட்டாபட்டியில் 10 கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நாளை (நவ.23) நடக்கும் கிராமசபை கூட்டத்தில் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பவும், நவ.26 அழகர்கோவிலில் கூட்டம் போட்டு அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

களஆய்வு

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதால் விவசாயம், பறவைகள் பல்லுயிர் தலம், பாரம்பரியமிக்க வரலாற்று சின்னங்கள் அழியும் அபாயம் உள்ளதாககூறி காவிரி வைகை கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் முருகன் கள ஆய்வு செய்தனர். மதுரை, சிவகங்கை, விருதுநகர் புதுக்கோட்டை நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
நவ 22, 2024 16:33

மிக்க எருமை???நான் தனி மனிதன்???அரசாங்கம் செய்யும் காரியத்தை தட்டி கேட்கமாட்டேன்???ஏனென்றால் அரசாங்கம் ஒரு குழுமம் வைத்து எல்லாம் ஆய்ந்து பார்த்து முடிவெடுக்கும், தனி மனிதனாக எனக்கு அந்த அளவுக்கு புரிதல் இல்லை???இதுவே ஒரு எதிரி குழுமம் என்ன செய்யும்???பலரை குழப்ப பலவித கோல்மால் வார்த்தைகள் புனைந்து பணம் கொடுத்து ஒரு பெரிய குழுமத்தை கூட்டும், அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று உளறிக்கொட்டி???எதிரி குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வருகின்றது ??அயல்நாட்டிலிருந்து???எதற்கு???இந்தியா மிக இக முன்னேற்றம் அடித்துக்கொண்டே செல்கின்றது என்ற பொறாமையில்????டங்ஸ்டன் எங்கு உபயோகம் பல்புகளில்???தாமிரம் எங்கு உபயோகம் மின்கம்பிகளில்???இவை ரெண்டும் நம் நாட்டில் உற்பத்தி செய்யவேண்டாம் எனில் அதன் தேவையை???எப்படி பூர்த்தி செய்வது???அறிவாய் மனிதர்களே???எதிரி குழுமத்தின் பேச்சுக்களை கேட்காதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை