மேலும் செய்திகள்
துாங்கிய மூதாட்டியை எழுப்பி நகை பறிப்பு
22-Sep-2024
போலீஸ் செய்திகள்...
08-Oct-2024
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே பந்தடி பகுதியில் தொடர் திருட்டு, நகைபறிப்பு நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மதுரை பந்தடி 9வது தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா 50. கேட்டரிங் அலுவலக ஊழியர். நேற்றுமுன்தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டருகே நடந்து வந்தபோது டூவீலரில் ெஹல்மெட் அணிந்து வந்த 2 பேர், மஞ்சுளாவின் 3 பவுன் நகையை பறித்தனர். அவர்களுடன் மஞ்சுளா போராடியதில் ஒன்றரை பவுன் நகையை மட்டுமே அவரால்காப்பாற்ற முடிந்தது. அதேபோல் கடந்த வாரம் பந்தடி 7வது தெருவில் நடந்து வந்த இரு சிறுவர்கள் திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு ஒரு அறையில் கணவன், மனைவி 'டிவி' பார்த்துக்கொண்டுஇருந்தனர். இதை பயன்படுத்தி டேபிளில் இருந்த பையில் இருந்து ரூ.3 ஆயிரத்தை திருடிச்சென்றனர். பந்தடி பகுதியை குறிவைத்து திருட்டு, நகைபறிப்பு நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: தீபாவளி பஜார் பாதுகாப்பில் போலீசார் கவனம் செலுத்துவதை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றனர்.
22-Sep-2024
08-Oct-2024