உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் ஜன.29ல் தெப்பத்திருவிழா துவக்கம்

குன்றத்தில் ஜன.29ல் தெப்பத்திருவிழா துவக்கம்

திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன. 29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமியுடன், தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். பிப். 7ல் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு ஜி.எஸ்.டி., ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தெப்பக்குளத்தில் காலை, மாலை தலா 3 சுற்றுகள் தெப்பம் சுற்றி வரும். தெப்பக்குளக் கரையில் உள்ள ஆழ்குழாய் மூலம் சில நாட்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை