உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மயானத்தில் வசதிகள் இல்லை

மயானத்தில் வசதிகள் இல்லை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சி.புதுாரில் மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். பரந்தாமன்: ஊரிலிருந்து மயானம் 1 கி.மீ., தொலைவில் உள்ளது. பாதை அரை கி.மீ., நீளத்திற்கு குறுகலாகவும், மண் ரோடாகவும் உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் சென்று வர சிரமமாக உள்ளது. இதனால் மண் ரோட்டை அகலப்படுத்தி தார் ரோடு அமைக்க வேண்டும். மேலும் செல்லும் பாதையில் போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது. டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மயானத்திற்கு அருகே குளியல் தொட்டி தண்ணீரின்றியும் பராமரிப்பின்றியும் பாழடைந்துள்ளது. இதனால் இறுதிச் சடங்குகள் செய்ய சிரமம் ஏற்படுகிறது. ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை