உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைச்சர் நட்ட மரங்களை பராமரிக்க ஆட்களில்லை

அமைச்சர் நட்ட மரங்களை பராமரிக்க ஆட்களில்லை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் கரையில் அமைச்சர் மூர்த்தி நட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகும் அவல நிலை உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க., விவசாய அணி சார்பில் விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமையில், எம். எல். ஏ., வெங்கடேசன் முன்னிலையில் நடந்த விழாவில் தென்கரை கண்மாய் கரையோரம் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை போதிய பராமரிப்பு இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன. கடுமையான வெயில், மழையின்றி கண்மாய் வறண்டு இருப்பது போன்ற காரணங்களால் தண்ணீரில்லாத நிலை உள்ளது. தற்போது கண்மாய்க்கு நீர் வரத்துள்ளது. இருந்தாலும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் அவை கருகும் நிலையில் உள்ளன. ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதியினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை