உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மயானத்திலும் நிம்மதி இல்லை

மயானத்திலும் நிம்மதி இல்லை

சோழவந்தான்; சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் எஸ். கிருஷ்ணாபுரம் மயானத்திற்கு ரோடு, மின்விளக்கு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அப்பகுதி பெரிய கருப்பன்: ஊரிலிருந்து அரை கி.மீ., மெயின் ரோட்டில் சென்று விளைநிலங்களுக்கு இடையே அமைந்திருக்கும் மண் ரோட்டில் மயானத்திற்கு செல்ல வேண்டும். மண் ரோடு மழைக்காலங்களில் சேதமடைந்து சகதியாய் மாறிவிடும். அடிக்கடி செடிகள் முளைத்து பாதையை மூடுமளவிற்கு புதர் போன்று மறைத்து விடும். இப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் செல்வதற்கு சிரமமாக இருக்கும். பாதை சீரற்று இருப்பதால் தடுமாறி விழவும், விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் மயானத்திற்கு அருகே தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை இதனால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு இயலாத நிலை உள்ளது. குளியல் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !