உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெளிப்படையான கலந்தாய்வு வேண்டும்

வெளிப்படையான கலந்தாய்வு வேண்டும்

மதுரை: 'மதுரையில் கள்ளர் சீரமைப்பு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை இன்று (ஜூன் 24) வெளிப்படையாக நடத்த வேண்டும்' என அனைத்திந்திய ஆசிரியர் பேரவை வலியுறுத்தியுள்ளது.மாநில சட்ட செயலாளர் பாலமுருக பாண்டியன் தெரிவித்துஉள்ளதாவது: மதுரை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் இக்கலந்தாய்வில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டபள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் காலியாக உள்ள 86 பணியிடங்களையும் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் உரிய இடங்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துறை ஆசிரியர்கள் கோரிக்கையை இணை இயக்குநர் உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறார். முறைகேடு புகார்களுக்கு இடமளிக்காமல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ