உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லி பரப்பியாச்சு; தார் ரோடு என்னாச்சு

ஜல்லி பரப்பியாச்சு; தார் ரோடு என்னாச்சு

மேலுார் : மேலுார் தாலுகாவில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்க இரும்பு குழாய்கள் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் ஜல்லி பரப்பியும் தார் ரோடு அமைக்காததால், மக்கள் சிரமப்படுகின்றனர். மேலுார் தாலுகாவில் 13 வருடங்களுக்கு முன் திருச்சி குளித்தலையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. அழுத்தம் காரணமாக குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. எனவே, தற்போது ரூ.98 கோடியில் இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி டிசம்பர் முதல் மேலுார் பகுதியில் நடக்கிறது. குழாய்கள் பதித்த இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஜல்லிக் கற்கள் பரப்பியதோடு சரி, தார் ரோடு அமைக்கவில்லை. சமூக ஆர்வலர் மணவாளன் கூறுகையில், 'நடந்து செல்வோர் வாகனங்களுக்கு வழிவிட ரோட்டோரம் ஜல்லிக் கற்கள் மீது ஒதுங்குவதால் தடுமாறி விழுகின்றனர். தார் ரோடு அமைக்காத நிலையில், வாகனங்கள் மணலில் சிக்கி மேலும் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது' என்றார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அதிக போக்குவரத்து உள்ளதால் இரவில்தான் ரோடு அமைக்க முடியும். தினமும் மாலை நேரம் மழை பெய்வதால் ரோடு அமைக்க முடியவில்லை. ஓரிருநாளில் ரோடு அமைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !