உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /   திருக்குறள் கண்காட்சி

  திருக்குறள் கண்காட்சி

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சீனா அறிஞர் யூசி திருக்குறள் அறக் கட்டளை தொடக்க விழா, கண்காட்சி, பல்திறன் போட்டிகள் நடந்தன. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்து பேசுகையில், 'யூசி சீன மொழியில் திருக்குறள் மட்டுமின்றி பாரதியார் பாடல்கள், ஆத்திச்சூடி போன்ற வற்றையும் மொழி பெயர்த்துள்ளார். வள்ளுவனை உலகிற்கு தந் திருக்கிறோம் என்பதற்கு சாட்சியாக இந்நிகழ்ச்சி நடக்கிறது' என்றார். பட்டிமன்ற பேச்சாளர் சண்முக வடிவேலு 'திருக்குறளை கதைகள் மூலமாகவும், நகைச்சுவை யாகவும் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம்' என்றார். திருக்குறள் கண்காட்சி போட்டிக்கான முதல் பரிசை மேலுார் எஸ்.எஸ்.வி. சாலா மேல்நிலைப் பள்ளி பெற்றது. பல்திறன் போட்டிக்கான குழு நடனத்தில் மேரி இமாக்குலேட் மெட்ரிக் பள்ளி முதல் பரிசு பெற்றது. ஆய்வுவள மையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி