இருளில் மூழ்கிய திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட்
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் ஒரு விளக்கு கூட எரியாததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். திருமங்கலம், கள்ளிக்குடி பகுதி கிராமங்களுக்கு இரவு 10:00 மணி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி 500க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன.சில நாட்களாக பஸ் ஸ்டாண்டில் ஒரு சிறு விளக்கு கூட எரியாததால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இரவு நேரத்தில் வரும் பயணிகள் பள்ளம், மேடு தெரியாமல் விழுந்து காயம் அடைகின்றனர். குழந்தைகளோடு வருவோர், வயதானவர்கள், பஸ் ஊழியர்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.