உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்

திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நேற்று பாலாலயம் பூஜைகளுடன் துவங்கியது.இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தாண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில், புதிய படிக்கட்டில் உள்ள படிக்கட்டு விநாயகர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.நேற்று காலை கோயில் விமானங்களில் இருந்து சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டு வரைபடங்களில் கலை ஏற்றம் செய்யப்பட்டு சுவாமி, தெய்வானை முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மூலம் உற்ஸவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கின.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச்செல்வம், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ