உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயிலில் பாலாலயம்: தையில் நடத்த திட்டம்

திருப்பரங்குன்றம் கோயிலில் பாலாலயம்: தையில் நடத்த திட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கும் வகையில் தை மாதம் பாலாலயம் பூஜை நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கோயிலில் இதற்கு முன்பு 6.6.2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் சேதமடைந்த உட்புற கற்சுவர்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் கும்பாபிஷேக பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அறங்காவலர்கள் பொறுப்பேற்ற பின் லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.கடந்த மாதம் நடந்த அறங்காவலர்கள் கூட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில், கீழரத வீதி அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமி கோயில், மலை அடிவாரம் பழனி ஆண்டவர் கோயில், மேலரத வீதி பாம்பலம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர்கள் சொந்த செலவில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைவில் துவக்கவும் ஆலோசித்து, அதற்கான பாலாலயம் தை மாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி